--- --:--:-- --

மது போதையில் பள்ளத்தில் விழுந்தவரை மீட்ட தீயணைப்பு துறையினர்..!

4

சென்னை பள்ளிக்கரணையில் மழை நீர் வடிகால் கால்வாயில் தவறி விழுந்து ஒருவர் காயமடைந்தார். அண்மையில் பூந்தமல்லியின் தேசிய நெடுஞ்சாலையில் மின்சார வாரியம் தோண்டிய பள்ளத்தில் இருசக்கர வாகனத்தோடு தவறிவிழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

 

முறையாக எச்சரிக்கை பலகை வைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இந்த சூழலில் பள்ளிக்கரணை ஏரி சாலையோரம் நடந்து சென்ற கனகராஜ் என்பவர் குடிநீர் வழங்கல் வாரியத்திற்காக தோண்டப்பட்ட மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்தார்.

 

தகவல் அறிந்து வந்து சென்ற தீயணைப்பு துறையினர் அவரை மீட்டனர். மதுபோதையில் அவர் தவறி விழுந்து தெரிய வந்தது. அந்த பகுதியில் தடுப்புகள் அமைக்காமல் பணிகள் நடைபெற்று வருவதாக மக்கள் கூறுகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon