தூய்மை பணியாளரை தேசிய கொடியேற்ற வைத்த தென்காசி காவல்துறை..!
சுதந்திர நாட்டில் அனைவரும் சமம் என்பதை வலியுறுத்தும் விதமாக தென்காசி காவல்துறையினர் தூய்மை பணியாளர் ஒருவரை தேசிய கொடியை ஏற்ற வைத்து சுதந்திர தினத்தை கொண்டாடினார்.
அரசு அலுவலகங்களில் வழக்கமாக உயர் அதிகாரிகள் விடுதலைப் போராட்ட வீரர்கள் தேசிய கொடியை ஏற்ற வைப்பது வழக்கம்.
அந்த வழக்கத்திற்கு மாறாக தென்காசி காவல் நிலையத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் காவல் நிலையத்தில் தினமும் சுத்தம் செய்யும் தூய்மை பணியாளர் சுப்பிரமணியனை வைத்து மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





