சிறுவனின் தொண்டையில் சிக்கிய ஊக்கு.. கத்தி படாமல் எடுத்த மருத்துவர்கள்..!
திருச்சி அருகே சிறுவனின் தொண்டையில் சிக்கிய ஊக்கை அரசு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை இன்றி அகற்றினர். குண்டூர் பர்மா காலனி சேர்ந்த கோபிநாத் என்பவரின் மகன் இரண்டு வயது சிறுவன் ஊக்கினை விழுங்கியதால் வலியால் துடித்தான்.
இதனையடுத்து சிறுவன் திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். தொண்டையில் விரிந்த நிலையிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அறுவை சிகிச்சை இன்றி ஊக்கு அகற்றப்பட்டதால் சிறுவன் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





