இளம் நடிகை அதிதி ஷங்கருக்கு திருமணம்..!
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் சென்சேஷன் நடிகையாக இருப்பவர் அதிதி ஷங்கர். இவர் கார்த்தியின் விருமன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தார்.இதை தொடர்ந்து சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த மாவீரன் படத்தில் கதாநாயகியாக நடித்து மக்கள் மனதை கவர்ந்துள்ளார்.
தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து தனது தந்தையிடம் தான் ஒரு நல்ல நடிகை என அதிதி ஷங்கர் நிரூபித்துள்ளார். ஆனாலும், தனது மகளுக்கு ஸ்ட்ரிக்ட் கண்டிஷன் ஒன்றை ஷங்கர் போட்டுள்ளாராம்.
இன்னும் இரண்டு ஆண்டுகள் எவ்வளவு படம் வேண்டுமானாலும் நடிச்சுக்கோ ஆனால், இரண்டு ஆண்டுகளுக்கு பின் கண்டிப்பாக திருமணம் செய்துகொள்ள வேண்டும் என அதிதி ஷங்கருக்கு ஒரு தந்தையாக கண்டிஷன் போட்டுள்ளாராம்.
இதனால் தற்போது தொடர்ந்து பல படங்களை கமிட் செய்து நடித்து வருகிறாராம் அதிதி. அடுத்ததாக அதர்வா தம்பி ஹீரோவாக அறிமுகமாகும் படத்தில் ஹீரோயினாக அதிதி நடித்து வருகிறார். இப்படத்தை விஷ்ணு வர்தன் இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




