--- --:--:-- --

போலீஸுடன் வாக்குவாதம்..திருச்சி சூர்யா தேவி கைது..!

1

போலீசாரை தரக்குறைவாக பேசியதாக டிக் டாக் பிரபலம் சூர்யா தேவியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருச்சி மாவட்டம், மணப்பாறையைச் சேர்ந்தவர் சூர்யா தேவி.

 

சினிமா நடிகைகள், அரசியல் பிரமுகர்கள், டிக்டாக் பிரபலங்களை திட்டி அதனை சோசியல் மீடியாக்களில் வெளியிட்டு அதன் மூலம் விளம்பரம் தேடிக்கொள்வது இவரது வழக்கம்.கடந்த 21 ஆம் தேதி மணப்பாறை காவல் நிலையத்தில் தனது கணவன் மருதுபாண்டி மற்றும் அவரது சகோதரர் தேவா ஆகியோர் தன்னை அடித்து துன்புறுத்தியதாக சூர்யா தேவி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

 

இந்நிலையில் தனது புகார் மீது போலீசார் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி நேற்று காவல்நிலையம் முன்பு உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளார்.

 

அப்போது அங்கிருந்த போலீசார் நடவடிக்கை எடுப்பதாக கூறி சூர்யா தேவியை சமாதானம் செய்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.இந்நிலையில் புகாருக்கு மனு ரசீது கொடுத்தும் விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்காமல் பணியில் இருந்த காவலர்களை சூர்யா தேவி தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது.

 

இது தொடர்பாக பெண் போலீஸ் ஏட்டு லாரான்ஸ் மேரி அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த மணப்பாறை போலீசார் சூர்யா தேவியை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி திருச்சி சிறையில் அடைத்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon