லண்டனில் வீடு புகுந்து பெண்ணுக்கு கத்தி குத்து..!
லண்டனுக்கு உயர்கல்விக்காக சென்றிருந்த ஹைதராபாத் சேர்ந்த 27 வயதான இளம்பெண் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். தேஜிஸ்வினி என்ற அந்த மாணவி நீல்கிரசிங் என்ற இடத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வேறு ஒரு பெண்ணுடன் சேர்ந்து தங்கி இருந்ததாக தெரிகிறது.
அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த பிரேசிலை சேர்ந்த 23 வயது இளைஞர் இவரையும், மற்றொரு பெண்ணையும் கத்தியால் குத்தியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் தாக்குதலில் படுகாயமடைந்த மற்றொரு பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கத்தியால் குத்தியரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த கொலை வழக்கில் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் 23 வயது இளைஞர் ஒருவரையும் லண்டன் போலீசார் கைது செய்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





