--- --:--:-- --

செந்தில் பாலாஜி காது அருகே வீக்கம்..!

2

போக்குவரத்து துறையில் வேலைவாங்கித் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சென்னை வீடு உள்பட இடங்களில் நேற்று காலை முதல் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வந்தனர்.

 

இந்த நிலையில் 20 மணி நேர விசாரணைக்குப் பிறகு இன்று நள்ளிரவு அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் திடீரென கைது செய்தனர்.

 

அமலாக்கத் துறை விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட இருந்த நிலையில் நெஞ்சுவலியால் கதறி அழுதார் அமைச்சர் செந்தில்பாலாஜி. ஓமந்தூரார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

இந்த நிலையில் மருத்துவமனையில் பேட்டியளித்த அமைச்சர் சேகர்பாபு, “அமைச்சர் செந்தில் பாலாஜி ஐசியுவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சுய நினைவில்லாமல் உள்ளார். நான்கு ஐந்து முறை பெயர் சொல்லி அழைத்தபோதும் அவர் கண் திறந்து பார்க்கவில்லை.

 

அவர் காது அருகே வீக்கம் உள்ளது. நிச்சயமாக துன்புறுத்தப்பட்டிருப்பார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சலசலப்புகெல்லாம் எல்லாம் திமுக அஞ்சாது. இது போன்ற பல சோதனைகளை திமுக பார்த்துள்ளது. பயம் கிடையாது” என்று கூறினார்.

Right Menu Icon