--- --:--:-- --

இபிஎஸ் தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம்..!

2

திமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அந்த கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் இன்று நடைபெறுகிறது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் காலை 10.30 மணி அளவில் இந்த கூட்டம் நடக்கிறது.

 

கூட்டத்தில் அனைத்து மாவட்ட செயலாளர்களும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஊழல் குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியதற்கு அதிமுக பாஜக இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.

 

இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. பாஜக உடனான கூட்டணியை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருப்பது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என கூறப்படுகிறது.

 

Right Menu Icon