--- --:--:-- --

தனது 4வது திருமணம், காதல் குறித்து ஓபனாக கூறிய வனிதா விஜயகுமார்..!

6

ளம் வயதிலேயே தமிழ் சினிமாவில் நடிக்க ஆரம்பித்த வனிதாவிற்கு அப்போது சினிமா க்ளிக் ஆகவில்லை. சில படங்களே நடித்த வனிதா பின் சினிமா பக்கமே காணவில்லை, அதற்கு பதிலாக திருமணத்தால் பல சர்ச்சைகளில் சிக்கி இருந்தார்.

 

கடைசியாக கூட பீட்டர் பால் என்பவரை காதலித்து 3வது திருமணம் செய்தார், ஆனால் அதுவும் பிரச்சனையில் முடிந்தது, சமீபத்தில் அவரும் உயிரிழந்தார்.இப்போது வனிதா படங்கள் நடிப்பது, சொந்த தொழிலை கவனிப்பது என பிஸியாக இருக்கிறார்.

 

அண்மையில் சாமி தரிசனம் செய்ய திருப்பதிக்கு சென்ற வனிதாவிடம் பேட்டி எடுத்துள்ளனர். அப்போது பேசும்போது, எனது இரண்டாவது இன்னிங்ஸுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது, நிறைய படங்கள் ரிலீஸ் ஆக இருக்கிறது.

 

தெலுங்கில் மல்லி பெல்லி படம் நடித்துள்ளேன் என்றார். ஆண்டவன் அருளால் மீண்டும் எனக்கு யார் மீது வேண்டுமென்றாலும் காதல் வரலாம் எனவும் கூறியிருக்கிறார் வனிதா.

Right Menu Icon