12ம் வகுப்பு விடைத்தாளில் உள்ள மதிப்பெண்ணுக்கும் மதிப்பெண் பட்டியலுக்கும் வித்தியாசம்..!
12ம் வகுப்பு விடைத்தாளில் உள்ள மதிப்பெண்ணுக்கும், மதிப்பெண் பட்டியலில் உள்ள மதிப்பெண்ணிற்கும் வித்தியாசம் உள்ளதாக மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியான அளவில் கட்டணம் செலுத்தி விடைத்தாள்க நகல்களை மாணவர்களை கைபற்றி வருகின்றனர்.
இந்நிலையில் பல மாணவர்களுக்கு விடைத்தாள் நகலில் உள்ள மதிப்பிற்கும், மதிப்பெண் பட்டியலுக்கும் வித்தியாசம் இருப்பதாக கூறப்படுகிறது.
உயர்கல்வி படிக்கும் மாணவர்கள் பலருக்கு கட் ஆப் மதிப்பெண்களில் பிரச்சனை ஏற்படும் சூழல் உள்ளதால் உரிய நடவடிக்கை எடுக்க மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





