தம்பிக்கு வர இருந்த மரணத்தை ஒரு நொடியில் தடுத்து நிறுத்திய அக்கா..!
அமெரிக்காவில் மூச்சு குழாயில் உணவு துண்டு சிக்கியதால் மூச்சு திணறல் ஏற்பட்டு தவித்த தனது சகோதரனை அவரது சகோதரி காப்பாற்றும் வீடியோ வைரல் ஆகி வருகிறது.
சிறுமி தனது சகோதரருடன் பள்ளியில் உணவருந்தி கொண்டிருந்த பொழுது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. சகோதரி சமயோஜனமாக செயல்பட்டு சிறுவனைத் தூக்கி மேலும் கீழும் குலுக்கி உணவு துண்டை வெளியேற்றினார்.
இதன் பின் சிறுவன் இயல்பு நிலைக்கு திரும்பினார். உரிய நேரத்தில் சகோதரி செய்த முதலுதவியால் அந்த சிறுவன் காப்பாற்றப்பட்டான்.





