--- --:--:-- --

காணாமல் போன விமானம்.. அமேசான் காட்டில் 17 நாட்கள் கிடந்த சடலங்கள்..!

8

கொலம்பியாவிலுள்ள அமேசான் வனப்பகுதியில் இருந்து தனி விமானத்தில் ஒன்றாம் தேதி ஒரு தம்பதியினர் அவர்களது 11 மாத குழந்தை உட்பட நான்கு குழந்தைகளுடன் பயணம் செய்தனர்.

 

இவர்கள் சென்ற விமானம் அமேசான் வனப்பகுதிக்கு மேலே வான்வெளியில் பறந்த பொழுது விமானி தன் விமானத்தின் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாக விமான கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவித்துள்ளார். அதன் பிறகு சிறிது நேரத்திலேயே விமானம் ஆனது விமான நிலையத்துடன் தனது கட்டுப்பாட்டை இழந்தது.

 

இந்நிலையில் காணாமல் போன விமானத்தை தேடும் பணி நடைபெற்று வந்தது. மேலும் இந்த தேடுதல் பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் மோப்ப நாய்கள் ஈடுபடுத்தப்பட்டன. கடந்த 15ஆம் தேதி விமானத்தின் பாகங்கள் சிதைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டன.

 

அதனை தொடர்ந்து தீவிரபடுத்தப்பட்ட தேடுதல் பணியில், விமானத்தில் பயணம் செய்த விமானம் மற்றும் குழந்தைகளின் தாய் மற்றும் தந்தை ஆகிய மூவரின் உடல்களும் கண்டுபிடிக்கப்பட்டன.

 

மேலும் இந்த விமானத்தில் பெற்றோருடன் பயணம் செய்த குழந்தைகள் பற்றிய விவரம் எதுவும் தெரியாத நிலையில் தொடர்ந்து தேடுதல் பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon