ஒரே இரவில் அடுத்தடுத்து விழுந்த 22 ராக்கெட்களால் அதிர்ச்சி..!
இஸ்ரேல் நகரங்கள் மீது ஹமாஜ் போராளிகள் சரமாரியாக ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு நீடிக்கிறது.
இஸ்ரேல் போலீசாரால் கைது செய்யப்பட்டு அந்நாட்டு சிறையில் அடைக்கப்பட்டு வரும் பாலஸ்தீனிகள் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டை எழுந்துள்ளது.
இந்த சூழலில் கடந்த பிப்ரவரி மாதம் இஸ்ரேல் போலீசாரால் பயங்கரவாத குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பாலஸ்தீன போராளிகளின் தலைவரான காதர் கடந்த மூன்று மாதங்களாக சிறையில் உண்ணாவிரத போராட்டம் நடத்திக் கொண்டிருந்தார்.
இதில் உடல்நலம் பாதிக்கப்பட்டவர் நேற்று முன்தினம் சிறையில் உயிரிழந்தார். இது பாலஸ்தீன்களுக்கு இடையே வெறும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து பாலஸ்தீனம் இஸ்ரேல் நகரில் ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





