திருந்தி வாழ நினைத்த மனைவி.. காதலனை வெட்டிய கணவன்..!
கோவை மாவட்டம் சூலூர் அருகே திரும்பி வாழ நினைத்த மனைவிக்காக கள்ளக்காதலனை ஓட ஓட விரட்டிய கணவர் கத்தியால் வெட்டிய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது. கோவை புதூர் பகுதியை சேர்ந்த ஆனந்த் என்பவர் பாப்பம்பட்டி பிரிவு அருகே உள்ள செல்வராஜ் பகுதியில் வேலை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்து இருந்தார்.
அப்பொழுது அவரை சந்திரன் பிரகாஷ் என்பவர் ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டினார். இதில் இடது கை மற்றும் கழுத்து பகுதியில் ஆனந்துக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் சந்திரன் பிரகாஷ் அங்கிருந்து தப்பியோடினார். தகவலின் பெயரில் வந்த போலீசார் ஆனந்திடம் விசாரணை மேற்கொண்டனர்.
அப்பொழுது சந்துருவின் மனைவியுடன் கடந்த இரண்டு ஆண்டுகளாக குடும்பம் நடத்தி வந்ததாகவும் இது சம்பந்தமாக சந்திரன் பிரகாஷ் உடன் முன் விரோதம் இருந்து வந்ததாகவும் தெரிவித்தார். அதன் பிறகு ஆனந்தை மருத்துவமனையில் அனுமதித்த போலிசார் தலைமறைவாக இருந்த சந்திரன் பிரகாஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





