ஓபிஎஸ் அணியிலிருந்து இபிஎஸ் அணிக்கு மாறிய ஈரோடு மாவட்ட செயலாளர் முருகானந்தம்..!
ஈரோடு கிழக்கு தொகுதிகளில் தேர்தல் களம் சூடுபடித்த நிலையில் ஓபிஎஸ் அணியை சேர்ந்த மாவட்ட செயலாளர் முருகானந்தம் இபிஎஸ் அணியில் இணைந்தார். சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள இல்லத்தில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த முருகானந்தம் அதிமுக இபிஎஸ் அணியில் இணைந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முருகானந்தம் ஈரோடு கிழக்கு தொகுதி இடை தேர்தலில் ஓபிஎஸ் அணி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செந்தில் முருகன் அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக கூட இல்லை என்று கூறினார்.






