--- --:--:-- --

இந்தியாவில் உள்ள ட்விட்டர் அலுவலகங்கள் திடீர் மூடல்..!

6

செலவினை குறைக்கும் நடவடிக்கையாக இந்திய அலுவலகங்களை மூடிவிட்டு அதன் ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்யுமாறு எலன் மஸ்க் உத்தரவிட்டுள்ளார். இந்தியாவில் டெல்லி, மும்பை, பெங்களூருவில் ட்விட்டர் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

 

இந்நிலையில் செலவினை குறைக்கும் நடவடிக்கையாக டெல்லி, மும்பை அலுவலகங்களை ட்விட்டர் நிறுவனம் மூடியுள்ளது. இந்தியாவில் பெங்களூர் அலுவலகம் மட்டுமே செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மூடப்பட்டுள்ள இரண்டு ட்விட்டர் அலுவலகங்களில் ஊழியர்கள் அலுவலகத்திற்கு வராமல் வீட்டிலிருந்து வேலை செய்யுமாறு ஊழியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon