--- --:--:-- --

துருக்கிக்கு 4 விமானங்களில் நிவாரண பொருட்கள் அனுப்பியது இந்தியா..!

4

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கிக்கு நான்கு விமானங்களில் இந்தியா மருந்து மற்றும் நிவாரண பொருட்களை அனுப்பி வைத்துள்ளது. துருக்கி மற்றும் சிரியாவில் அடுத்தடுத்த நிலநடுக்கத்தால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில் அந்நாடுகளுக்கு தேவையான உதவிகளை இந்தியா வழங்கி வருகிறது.

 

முதல் கட்டமாக நான்கு விமானங்களில் தேவையான மருந்து பொருட்கள், மீண்டும் பணிகளுக்கு தேவையான துளையிடும் கருவிகள், மக்களுக்கான நிவாரண பொருட்கள் ஆகியவை துருக்கிக்கு அனுப்பப்பட்டுள்ளன. முதல் விமானமான இந்திய விமானப்படையின் சி70 ரக விமானம் மீட்பு மற்றும் நிவாரண படையினர். மோப்ப நாய்கள். துளையிடும் கருவிகள். நிவாரண பொருட்கள் மற்றும் மருந்துகளை ஏற்றிக்கொண்டு நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கியின் அதானா பகுதியில் தரை இயங்கியது. மீட்பு குழுக்களுடன் பறந்த விமானம் தரை இறங்கியது. மருத்துவக் குழுவினர் எக்ஸ்ரே கருவிகள், ஆக்சிஜன் உற்பத்தி சேகரிக்கும் கருவிகள் ஆகியவற்றுடன் மூன்றாவது மற்றும்
நான்காவது விமானமும் அனுப்பி வைக்கப்பட்டது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon