--- --:--:-- --

71 ஆயிரம் பேருக்கு அரசு வேலை – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்..!

4

ல்வேறு அரசு பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்ட 71 ஆயிரம் பேருக்கு பிரதமர் மோடி பணியமன ஆணைகளை இன்று வழங்க உள்ளார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் தேதி மத்திய அரசின் அமைச்சரக துறைகளில் அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள் பணியில் இருக்கும் ஊழியர்களின் எண்ணிக்கை தொடர்பாக பிரதமர் மோடி ஆய்வு மேற்கொண்டார்.

 

அப்பொழுது அடுத்த ஒன்றரை ஆண்டுக்குள் சிறப்பு பணி நியமனங்கள் மூலம் மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள 10 லட்சம் இடங்களை நிரப்ப பிரதமர் மோடி அறிவுறுத்தியினார். இதை தொடர்ந்து நாடு முழுவதும் 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்க வழி செய்யும் திட்டத்தை பிரதமர் மோடி அக்டோபர் மாதம் தொடங்கி வைத்தார்.

 

இந்த வேலை வாய்ப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக 21,000 பேருக்கு பணி நியமன ஆணைகளை பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் இன்று வழங்க உள்ளார்.

 

Right Menu Icon