கால்பந்து விளையாடிய மாணவி மைதானத்தில் மயங்கி விழுந்து பலி..!
அமெரிக்காவில் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த மாணவி ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவில் பள்ளி ஒன்றில் படித்து வந்த 16 வயது மாணவி தனது பள்ளியில் நடைபெற்ற கால்பந்து போட்டி ஒன்றில் கலந்து கொண்டார்.
கால்பந்து விளையாடிக்கொண்டிருந்த அவர் திடீரென மைதானத்தில் மயங்கி விழுந்தார். மாணவியை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவர்கள் கடுமையாக போராடியும், மாணவியை காப்பாற்ற முடியவில்லை.
தற்பொழுது அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு காரணமாக அவர் உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது. கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த பெண் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அங்கு அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.






