புயல் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தீவிரம்..!
வங்கக்கடலில் புயல் உருவாகும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ராமச்சந்திரன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் தமிழகமெங்கும் 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள் 5,093 நிவாரண முகாம்கள் அனைத்து முகாம்களிலும் தயாராக உள்ளனர் என தெரிவித்தார்.
தாழ்வான பகுதியில் இருக்கும் மக்களை முகாம்களுக்கு அழைத்து செல்ல நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியருக்கு அறிவுறுத்தியே இருப்பதாக அவர் கூறியுள்ளார். இது மட்டுமின்றி முகாம்களின் தங்க வைக்கப்படும் மக்களுக்கு உணவு, குடிநீர் உள்ளீட்டு அடிப்படை வசதிகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று கூறி இருக்கிறார்.
நீர் நிலைகளில் நீர் இருப்பு. நீர் வரத்து ஆகியவற்றை கண்காணித்து உபரிநீர் வெளியேற்றும் பொழுது உரிய முன்னறிவிப்பை வெளியிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





