தவறுதலாக ஒருவரின் வயிற்றில் பாய்ந்து குண்டு..!
பொள்ளாச்சியில் துப்பாக்கியை தவறுதலாக இயக்கப்பட்டதால் ஒருவரின் வயிற்றில் குண்டு பாய்ந்தது. மகாலிங்கம் பகுதியை சேர்ந்த மீனாட்சி என்பவரின் வீட்டிற்கு சென்னையில் வசிக்கும் அவரது உறவினர் செல்வ முத்துக்குமார் சென்றுள்ளார்.
அங்கு தங்கி இருக்கையில் மீனாட்சி சுந்தரத்தின் மகன் ஏர்கன் என்ற துப்பாக்கியை சுத்தம் செய்து கொண்டிருந்தான். அப்பொழுது அதனை பார்ப்பதற்காக செல்வகுமார் வாங்கிய பொழுது அவரது கை ட்ரிகரில் பட்டுள்ளது.
இதனால் துப்பாக்கில் இருந்து பாய்ந்து குண்டு செல்வகுமாரின் வயிற்று பகுதியில் பாய்ந்தது. மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





