நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடக்கம்..!
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் ஆன்லைன் சூதாட்டங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என அனைத்து கட்சி கூட்டத்தில் திமுக எம்பி பாலு கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி வரும் 29ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. கூட்டத்தொடரை சுமூகமாக நடத்தும் வகையில் டெல்லியில் அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட்டது.
பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் காங்கிரஸ் சார்பில் ஆதிரஞ்சன் சவுத்ரி, திமுக மக்களவை குழு தலைவர் பாலு, அந்த கட்சியின் எம்.பி சிவா, அதிமுக நாடாளுமன்ற குழு தலைவர் தம்பிதுரை, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவரும் எம்பியும் ஆன வாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்திற்கு பிறகு செய்தியாளிடம் பேசிய பாலு பெட்ரோல், டீசல் மற்றும் விலைவாசி உயர்வு வேலைவாய்ப்பின்மை உட்பட பல்வேறு பிரச்சினைகள் குறித்து கூட்டத்தொடரில் விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தியதாக தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





