ஆன்லைனில் தகவல் அறியும் உரிமைச் சட்ட வசதி..!
ஆன்லைனில் தகவல் அறியும் உரிமைச் சட்ட வசதியை உருவாக்குவது தொடர்பாக அனைத்து உயர்நீதிமன்றங்களும் மூன்று வாரத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆர்டிஐ எனப்படும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் உரிய தகவல்களை பெற ஆன்லைன் வசதியை ஏற்படுத்தக் கூடிய மனுவை உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வு விசாரித்தது. ஆன்லைன் வசதி இல்லாததால் ஆர்டிஐ-யின் கீழ் தகவல் கோருபவர்கள் தங்களது விண்ணப்பங்களை நேரில் வந்து சமர்பிக்க வேண்டிய நிலை இருப்பதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த விவகாரத்தில் ஒன்பது உயர்நீதிமன்றங்கள் மட்டுமே அறிக்கை சமர்ப்பித்திருப்பதால் அனைத்து உயர் நீதிமன்றங்களும் மூன்று வாரத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





