கட்டாய மதமாற்றம் : உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!
தொண்டு நிறுவனங்களின் நோக்கம் மதமாற்றமாக இருக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கட்டாய மதமாற்றத்திற்கு எதிராக வலுவான சட்டத்தை உருவாக்க மத்திய அரசுக்கு உத்தரவிட கோரி பாரதிய ஜனதாவை சேர்ந்த உபாத்தியா என்பவர் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.ஆர்.ஷா தலைமையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் நாடு முழுவதும் மாநில அரசுகளிடமிருந்து கட்டாய மதமாற்றங்கள் தொடர்பான விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாக கூறினார். இது தொடர்பான கூடுதல் விவரங்களை தாக்குதல் செய்ய கால அவகாசம் வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.
இதையடுத்து நீதிபதிகள் வழக்கின் விசாரணையை வரும் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். இந்த வழக்கை சாதாரணமாக கருத வேண்டாம் என்றும் கட்டாய மதமாற்றங்கள் இந்திய அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்றும் கருத்து தெரிவித்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





