திருவண்ணாமலையில் தீபம் ஏற்றப்பட்டது..! அமைச்சர் சேகர் பாபு பங்கேற்பு..!
அக்னி பிழம்பாக சிவன் காட்சி காட்சியளித்த தளம் திருவண்ணாமலை என கூறப்படுகிறது. தீபத் திருவிழாவில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 3,500 லிட்டர் நெய் ஊற்றப்பட்டு மகாதீபம் ஏற்றப்படுகிறது.
2668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டுள்ளது. திருவண்ணாமலை தீபத் திருவிழாவில் அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டார். மகாதீபம் ஏற்றப்பட்டு அண்ணாமலையார் அரோகரா என பக்தர்கள் முழக்கமிட்டு தரிசனம் செய்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





