--- --:--:-- --

திருமணமான மூன்று மாதத்தில் மரணத்தில் முடிந்த காதல் விவகாரம்..!

5

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டில் காதல் திருமணம் செய்து கொண்ட பெண் மூன்றே மாதத்தில் துப்பட்டாவால் கைகள் கட்டப்பட்ட நிலையில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டது. இது குறித்து விசாரணை மேற்கொண்டு உள்ளார்.

 

பேரணாம்பட்டு திருவீகானந்தர் பகுதியை சேர்ந்த ராஜேஸ்வரியும், ஸ்ரீதரும் இரண்டு ஆண்டுகளாக காதலித்து பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டனர். இதில் ஸ்ரீதர் வீட்டாருடன் வசித்து வந்த நிலையில் நேற்று முன்தினம் ஏற்பட்ட தகராறின் பொழுது ஸ்ரீதர் ராஜேஸ்வரியை அடித்ததாக கூறப்படுகிறது.

 

மறுநாள் காலையில் ராஜேஸ்வரி வீட்டில் இல்லாததால் கணவரின் வீட்டார் அவரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் விவசாயி கிணற்றிலிருந்து ராஜேஸ்வரி உடலை கைகள் கட்டப்பட்ட நிலையில் தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon