--- --:--:-- --

instagram-ல் பட்டாக்கத்தியுடன் காணொளி வெளியிட்ட இளைஞர் கைது..!

16

instagram-யில் வன்முறையை தூண்டும் வகையில் காணொளியை வெளியிட்ட மதுரை இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர். மதுரையை சேர்ந்த இளைஞர் அஜித்குமார் என்பவர் தனது இன்ஸ்டாகிராம் சமூக வலைதள பக்கத்தில் திரைப்படப் பாடலுக்கு ஏற்ப நடனம் ஆடுவது, ஆயுதங்களுடன் போஸ் தருவது உள்ளிட்ட காணொளிகளை வெளியிட்டுள்ளார்.

 

இந்நிலையில் அவரது காணொளி அச்சம் தரும் வகையில் இருப்பதாக மதுரை காவல் ஆணையர் செந்தில்குமாரிடம் புகார்கள் குவிந்து வந்தன. இந்த நிலையில் தனிப்பட காவல்துறையினர் விசாரணையை தொடங்கிய நிலையில் அஜித்குமாரை தொடர்ந்து தீவிரமாக தேடி வந்த காவல்துறையினர் ஒத்தக்கடையில் வைத்து கைது செய்தனர்.

 

அஜித்குமார் மீது ஏற்கனவே கொலை முயற்சி, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon