ஒரு ஆதார் எண்ணுடன் எத்தனை இணைப்பை இணைக்க முடியும்..?
ஒரு ஆதார் எண்ணுடன் எத்தனை மின் இணைப்புகளை வேண்டுமானாலும் இணைக்கலாம் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 2 கோடியே 30 லட்சம் மின் இணைப்புகளும், 22 லட்சம் விவசாயம் இன் இணைப்புகளும், 11 லட்சம் குடிசை வீடுகளுக்கான மின் இணைப்புகளும் இருக்கின்றன.
மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வரும் டிசம்பர் 31ஆம் தேதி வரை மின்சார வாரியம் அவகாசம் அளித்துள்ளது. தமிழக முழுவதும் 2,711 சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. நுகர்வோர் வசதிக்காக இந்த சிறப்பு முகாம்கள் டிசம்பர் 31ஆம் தேதி வரை செயல்பட உள்ளன.
காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை முகாம்கள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மயிலாப்பூரில் உள்ள மின் கட்டண மையத்தில் நடைபெற்ற சிறப்பு முகாமில் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் ஆய்வு செய்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





