அருணாச்சலப் பிரதேசத்தின் முதல் விமான நிலையத்தைப் பிரதமர் இன்று திறந்து வைத்தார்..!
அருணாச்சலப் பிரதேசத்தின் முதல் விமான நிலையத்தைப் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்து நாட்டிற்கு அர்ப்பணித்தார். அருணாச்சல பிரதேசத்தின் விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.
அதேபோல் 600 மெகாவாட் கொண்ட மின் நிலையத்தையும் திறந்து வைத்து நாட்டிற்கு அர்பணித்தார். தொடர்ந்து பொதுமக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி கடந்த 2019 ஆம் ஆண்டு விமான நிலையத்திற்காக அடிக்கல் நாட்டிய பொழுது தேர்தலை மனதில் கொண்டே இந்த திட்டம் வகுக்கப்பட்டதாகவும் நிச்சயம் விமான நிலையம் கட்டி முடிக்கப்படாது என்றும் எதிர் கட்சிகள் விமர்சித்ததாக தெரிவித்தார்.
ஆனால் இன்று அவர்களது முகங்களில் அறைந்தது போல விமான நிலையங்கள் திறக்கப்பட்டுவிட்டது என மோடி கூறினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





