ஏடிஎம்மில் பணம் எடுத்து தருவதாக கூறி பெண்ணை ஏமாற்றிய நபர்..!
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் ஏடிஎம்மில் பணம் எடுக்க உதவுவது போல் பெண்ணை ஏமாற்றி 56 ஆயிரம் ரூபாய் மோசடி செய்த இளைஞரை சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் தேடி வருகின்றனர். கலைச்செல்வி என்பவர் ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்காக அருகில் இருந்த நபரை உதவுமாறு அணுகியுள்ளார்.
இதை பயன்படுத்திக் கொண்ட இளைஞர் ஏடிஎம் பின் நம்பரை அறிந்து கொண்டு பணம் வரவில்லை என்று போலி கார்டை கொடுத்துவிட்டு பின் அந்த கார்டை பயன்படுத்தி 56 ஆயிரம் ரூபாய் எடுத்துள்ளார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார்.
எனவே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





