--- --:--:-- --

பிறந்த குழந்தை இறந்ததற்கு மருத்துவர்களின் அலட்சியமே காரணம் என உறவினர்கள் போராட்டம்..!

3

சென்னை அடுத்த குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தை இறந்ததற்கு மருத்துவர்களின் அலட்சியமே காரணம் எனக் கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 14ஆம் தேதி பிரசவ வலியால் அனுமதிக்கப்பட்ட ஆனந்தி என்பவருக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில் மூச்சுமூச்சு திணறல் காரணமாக குழந்தை இறந்தது.

 

இது மருத்துவர்களின் அலட்சியம் காரணமாகவே நடத்ததாக குற்றம் சாட்டி குரோம்பேட்டை சாலையில் சென்ற பேருந்தை மறித்து மறியலில் ஈடுபட்டனர்.

 

இது குறித்து மருத்துவமனையின் தலைமை மருத்துவர் பழனிவேலிடம் கேட்ட பொழுது குழந்தைக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு மூச்சுத் திணறல் காரணமாக இறந்ததாக கூறினார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon