அச்சு அசல் கமல் ஹாசன் போலவே இருக்கும் துபாய் நபர்..!
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் கமல். இவர் கடைசியாக நடித்து வெளிவந்த விக்ரம் திரைப்படம் கூட மாபெரும் அளவில் வெற்றியடைந்தது. இதை தொடர்ந்து அடுத்ததாக மணி ரத்னம் இயக்கத்தில் தன்னுடைய 234வது படத்தில் நடிக்கவிருக்கிறார் கமல். இப்படத்தின் அறிவிப்பு அண்மையில் வெளிவந்தது.
நடிகர்களை போலவே இருக்கும் நபர்களின் புகைப்படங்கள் அண்மை காலமாக சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வகையில் தற்போது துபாய்யை சேர்ந்த நபர் ஒருவர் அச்சு அசல் பார்ப்பதற்கு விஸ்வரூபன் படத்தில் வரும் கமல் ஹாசன் போலவே இருக்கிறார். அவருடன் நடிகர் விஷால் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.





