பச்சிளம் பெண் குழந்தையின் சடலம் கரை ஒதுங்கிய சம்பவம்..!
வீராம்பட்டினம் கடற்கரையில் பச்சிளம் பெண் குழந்தையின் சடலம் கரை ஒதுங்கிய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் மீனவர் கடற்கரையில் பச்சிளம் குழந்தையின் சடலம் கரை ஒதுங்கியதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் பச்சிளம் பெண் குழந்தையின் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். குழந்தை மருத்துவமனையில் பிறந்ததற்கான அறிகுறி இருந்ததால் குழந்தையை கடலில் வீசி சென்றவர்கள் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





