அண்ணனுக்கு முத்தம் கொடு..ரச்சித்தாவிடம் எல்லை மீறி நடந்துகொண்ட ராபர்ட் ..!
பிக் பாஸ் 6ல் தொடர்ந்து ரச்சித்தாவிடம் Flirt செய்து வருகிறார் ராபர்ட் மாஸ்டர். முதலில் சற்று காமெடியாக சென்றுகொண்டிருந்த இந்த விஷயம், தற்போது முகம் சுளிக்கும் வகையில் மாறியுள்ளது.அதற்க்கு முழு காரணமே ராபர்ட் மாஸ்டர் நடந்துகொள்ளும் விதம் தான். கடந்த வாரம் கமல் ஹாசன் முன்பே ரச்சித்தாவிடம் மறைமுகமாக ப்ரொபோஸ் செய்வதுபோல் நடந்துகொண்டார் ராபர்ட்.
இந்நிலையில், தற்போது நடந்து வரும் ஸ்வீட் டாஸ்கில் மீண்டும் ரச்சித்தாவிடம் முகம் சுளிக்கும் வகையில் நடந்துகொண்டுள்ளார். நான் இனி உன்னுடைய அண்ணனாக இருக்கிறேன் என்றும், இதனால் அண்ணனுக்கு முத்தம் கொடு என்றும் எல்லை மீறி மோசமான வகையில் ரசித்தாவிடம் பேசியுள்ளார்.
இந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு செய்து ரசிகர்கள் பலரும் ராபர்ட் மாஸ்டரை கண்டித்து பதிவு செய்துள்ளார்.





