--- --:--:-- --

ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகி இளைஞர் தற்கொலை..!

2

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகி கடனாளியாக இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார்.

 

கடந்த 23ஆம் தேதி வெளியூர் செல்வதற்காக புறப்பட்டவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் குடும்பத்தினர் தேடியுள்ளனர். அதே ஊரில் உள்ள அவர்களது மற்றொரு வீட்டில் உடல் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்ததை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

 

பூபதி ராஜாவின் அலைபேசியை காவல்துறையினர் ஆய்வு செய்ததில் அவர் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாக இருந்தது தெரியவந்தது. குடும்பத்தினரிடம் விசாரித்தது ஆன்லைன் சூதாட்டத்தில் மிகவும் தீவிரமாக இருந்ததாகவும் தாங்கள் அறிவுறுத்திய பொழுது நிறுத்தவில்லை என்றும் கூறுகின்றனர்.

 

தற்கொலை செய்து கொள்ளும் முன்பு குரல் பதிவு ஒன்றே whatsapp மூலம் ராஜா பதிவு செய்து வைத்துள்ளார். அதில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகி கடனாளியாகிவிட்டதாகவும் தாயின் தங்க சங்கிலியை அடகு வைத்து விட்டதாகவும் குறிப்பிட்டுள்ள பூபதி ராஜா தன்னை மன்னித்து விடுமாறும் உருக்கமாக பேசியுள்ளார்.

 

ஆன்லைன் சூதாட்ட வழக்கு தடை விதிக்கும் மசோதா கடந்த வாரம் தான் சட்டப் பேரவையில் நிறைவேற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Right Menu Icon