ரயில் நிலையத்தில் பிறந்த ஆண் குழந்தை..!
பிரசவ வலியால் துடித்த ஒரு பெண்ணுக்கு அரக்கோணம் ரயில் நிலையத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. திருப்பத்தூர் ரயில் நிலைய அதிகாரியாக பணியாற்றி வருபவர் அஸ்வின்குமார்.
இவரது மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் பிரசவத்துக்காக சென்னையில் உள்ள ரயில்வே மருத்துவமனைக்கு செல்ல திட்டமிட்டிருந்தார். ஆனால் ரயில் அரக்கோணம் வந்து நிற்க பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
இதனால் செய்வதறியாது தவித்து இருந்து கீழே இறங்கி அரக்கோணம் ரயில் நிலையத்தில் ஓய்வு அறைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





