கிணற்றுக்குள் தவறி விழுந்த சிறுத்தை உயிருடன் மீட்பு..!
வயநாடு அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்த சிறுத்தை மீட்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள தலப்புழா பகுதியை சேர்ந்தவர் ஜூகி . இவரது வீட்டின் பின்புறம் உள்ள கிணற்றுக்கு சிறுத்தை கிடப்பதை கண்ட வனத்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர் சிறுத்தையை உயிருடன் மீட்டனர். பின்னர் அதற்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டு பாதுகாப்பாக கூண்டுக்குள் அடைக்கப்பட்ட உரிய சிகிச்சைக்கு பின் சிறுத்தை அடர்ந்த வனப்பகுதிக்குள் விடப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.





