அச்சமூட்டும் வகையில் பேருந்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர்..!
கேரள மாநிலம் பாலக்காட்டில் 9 பேரின் உயிரிழப்புக்கு காரணமான ஓட்டுனர் இதே போல் முன்பும் அச்சமூட்டும் வகையில் ஓட்டும் வீடியோ வெளியாகியுள்ளது. சுற்றுலா பேருந்து விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர்.
பேருந்து ஓட்டுனர் ஜோஹு என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்நிலையில் ஓட்டுனர் இருக்கையில் அமராமல் நடனம் ஆடியபடியே பேருந்தை இயக்கிய காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகியதை அடுத்து கண்டன பதிவுகள் வந்து கொண்டிருக்கின்றது.





