--- --:--:-- --

காதல் தோல்வியால் சினிமா நடிகை தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்..!

4

சென்னை விருகம்பாக்கத்தில் காதல் தோல்வியால் சினிமா நடிகை தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் விவகாரத்தில் நடிகையின் கணவர் ஃபோன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நடிகை தற்கொலை செய்து கொண்ட பிறகு முதல் ஆளாக வந்து கதவை உடைத்து பார்த்த இயக்குனர் நண்பர் பிரபாகரனை பிடித்து விசாரித்த போலீசார் அவரிடமிருந்த நடிகையின் ஐபோனை மீட்டனர்.

 

இந்நிலையில் நடிகை பயன்படுத்திய 3 செல்போன்கள், ஒரு டேப் ஆகியவற்றில் உள்ள விவரங்கள் அடிப்படையில் சிராஜுதீனிடம் விசாரணை நடத்த உள்ளதாக தெரிவித்துள்ள போலீசார் மீட்கப்பட்டு போனில் ஏதேனும் அழிக்கப்பட்டு இருக்கிறதா என்பதை தடயவியல் துறையின் ஆய்வுக்கு உட்படுத்த திட்டமிட்டுள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon