தேசிய கட்சியை விரைவில் தொடங்க இருக்கும் சந்திரசேகரராவ்..!
தேசிய கட்சியை விரைவில் தொடங்க இருப்பதாகவும் அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார். 2024 மக்களவைத் தேர்தலில் ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக வலிமையான கூட்டணி உருவாக்க எதிர்க் கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி தலைவரும் முதலமைச்சருமான சந்திரசேகரராவ் ஈடுபட்டு வருகிறார்.
பாஜக கூட்டணியில் இருந்து விலகிய பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரை சந்தித்து பேசியிருந்தார். இதேபோல் கர்நாடக முன்னாள் முதலமைச்சரும் மதசார்பற்ற ஜனதா தள கட்சியின் தலைவருமான குமாரசாமியும் சந்திரசேகரராவ் நேற்று சந்தித்து ஆலோசித்து சந்திரசேகரராவ் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தேசிய செயல் திட்டங்களுக்கு தேசிய கட்சியை தொடங்க ஒருமித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக பொருளாதார வல்லுனர்கள் பல்வேறு துறைகளின் நிபுணர்கள் உள்ளிட்ட பலரிடம் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





