உருண்டு ஓடிய ஆட்டோ மீது இரு சக்கர வாகனம் மோதி விபத்து..!
உளுந்தூர்பேட்டை அருகே தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்து உருண்டு ஓடிய ஆட்டோ மீது இரு சக்கர வாகனம் மோதி விபத்திற்குள்ளானது. செங்குறிச்சி கண்காட்சிக்கு சென்று விட்டு திரும்பிய ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் ஓடியது. அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனம் ஆட்டோ மீது மோதியது.
இந்த காட்சிகள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளன. விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





