23 லட்சத்துக்கும் அதிகமான வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கம்..!
தகவல் தொழில்நுட்பத்திற்காக இந்தியாவில் கடந்த ஜூலை மாதம் இருபத்தி மூன்று இலட்சத்துக்கும் அதிகமான வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கப்பட்டன. அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் வாட்ஸ் அப் செயலியை இரண்டு மில்லியனுக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர்.
சமூக ஊடகங்களில் வெறுப்புணர்வை தூண்டும் பேச்சுக்கள், தவறான தகவல்கள் செய்திகள் வேகமாக பரவுவதை தடுக்கும் வகையில் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த கடுமையான விதிமுறைகள் மத்திய அரசால் கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்டன.
அதன்படி கடந்த ஜூலை மாதம் விதிமீறல்களுக்காக இருபத்தி மூன்று லட்சத்து 87 ஆயிரம் இந்திய வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல கடந்த ஜூன் மாதம் 22 லட்சம் கணக்குகளும், மே மாதம் 19 லட்சம் கணக்குகளும், ஏப்ரலில் 16 லட்சம் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





