நீட் தேர்வு எழுதிய மாணவி தூக்கிட்டு தற்கொலை..!
தென்காசி மாவட்டம் குலசேகரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ராஜலட்சுமி என்ற மாணவி 2020 ஆம் ஆண்டு பிளஸ் டூ முடித்த நிலையில் மூன்றாவது முறையாக இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதியுள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக நீட் தேர்வில் தோல்வியடைந்த நிலையில் மூன்றாவது முறையாக தேர்வு எழுதியுள்ளார். கீ ஆன்சர் வெளியிடப்பட்டதிலிருந்தே மாணவி ராஜலட்சுமி சோகமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் அவர் தற்கொலை முடிவை எடுத்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





