--- --:--:-- --

வீட்டின் கான்கிரீட் மேற்கூரை பெயர்ந்து விழுந்து விபத்து..!

9

மயிலாடுதுறை அருகே தொகுப்பு வீட்டின் கான்கிரீட் மேற்கூரை பெயர்ந்து விழுந்தது. இதில் தூங்கிக்கொண்டிருந்த பெண் படுகாயம் அடைந்துள்ளார். கிராமத்தில் உள்ள தொகுப்பு வீட்டில் வசிக்கும் வேம்பு என்ற பெண் தனது குழந்தைகளுடன் தூங்கிக் கொண்டிருந்தார்.

 

அப்போது வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததால் வேம்பு கால், தலை மற்றும் இடுப்பில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் அவரது 2 வயது மகன் காயம் ஏற்பட்டது. தொகுப்பு வீடுகள் சேதம் அடைந்துள்ளதால் அரசு உடனடியாக புதிய வீடுகள் கட்டித்தர வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon