கழிவுநீர் கால்வாய்க்குள் தவறி விழுந்த போதை நபர்..!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பிற்பகலில் சுமார் மூன்று மணி நேரமாக கனமழை பெய்தது. இதன் காரணமாக சாலைகளில் மழை நீர் வெள்ளம் சாலையோரங்களில் உயிர்பலி வாங்கும் பெர்முடா முக்கோணம் போல பராமரிப்பில்லாமல் விடப்பட்ட கழிவு நீர் கால்வாய்கள் பாய்ந்து கொண்டிருந்தது.
அடாத மழையிலும் விடாத போதையில் மது பிரியர் ஒருவர் சாலையில் தள்ளாடி நடந்து கொண்டார். அப்போது போதையில் வேகத்தால் ஒரு பக்கமாக தள்ளி சென்று கால் தடுமாறி மழைநீர் பாயக்கூடிய கழிவுநீர் கால்வாய்க்குள் விழுந்தார்.
மதப்பிரியர் உள்ளே விழுந்ததை சிலர் செல்போனில் படம் பிடித்துக் கொண்டிருக்க இளைஞர் ஓடிச் சென்று அந்த கால்வாய்க்குள் இறங்கி கையைவிட்டு தேடியுள்ளார். ஆனால் உள்ளே விழுந்தவரை காணவில்லை. கையிலும் சிக்கவில்லை.
உடனடியாக மழை நீரில் இழுத்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்று சந்தேகித்து மற்றொரு இடத்தில் திறந்து கிடந்த கால்வாயை உற்று நோக்கிய பொழுது உயிருக்கு போராடிய நிலையில் அந்த கால்வாயில் கிடைந்தவரை மீட்டு முதலுதவி செய்தனர். இதன் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





