இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து..!
கேரளாவில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த கணவன் மனைவி மகன் பரிதாபமாக உயிரிழந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ராஜசேகர் மற்றும் அவரது மனைவி ஷோபா சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளார். மேலும் காரில் இருந்த தம்பதியினருடன் பயணித்தவர்களின் மகன் படுகாயங்களுடன் காணப்பட்டார். அவரை மீட்டு கோட்டயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கிருந்து அவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் மற்றொரு காரில் காணப்பட்ட 4 பயணிகள் படுகாயம் அடைந்த நிலையில் மற்றொரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.





