--- --:--:-- --

நெருப்பினால் சுட்டாலும் உருகாத ஐஸ்கிரீம்..!

7

நெருப்பால் சுட்டும் கூட உருகாத வகையில் சீனா தயாரித்த புதிய ஐஸ்கிரீம் வைரலாகி வருகிறது. பொதுவாக ஐஸ்கிரீம் கவரில் இருந்து வெளியே எடுப்பதற்கு முன்னதாகவே உருகி விடும். இந்த பிரச்சினைக்கு முடிவு கட்டும் விதமாக சீனர்கள் ஒரு ஐஸ்கிரீம் ஒன்றை தயாரித்துள்ளனர்.

 

இவர்கள் உருவாக்கிய ஐஸ்கிரீமை நெருப்பை காட்டினால் கூட கரையாது என்று கூறப்படுகிறது. இது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பெய்ஜிங் நகரத்தை சேர்ந்த நிறுவனம் தயாரித்துள்ளது.

 

எந்தளவிற்கு உறுதியானது என்பதை வீடியோவாக எடுத்து இணையத்தில் வெளியிட்ட இந்த நிறுவனம் இதன் விலையை 250 ரூபாயாக நிர்ணயித்துள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Right Menu Icon