மணிப்பூரில் உள்ள அனைத்து பள்ளிகளும் மூட உத்தரவு..!
மணிப்பூரில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதால் மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் வரும் 24ம் தேதி வரை மூட மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதையடுத்து மாநில அரசு விடுத்துள்ள அறிக்கையில் மாநிலத்தில் கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொற்று 15 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது. எனவே தொற்றை கட்டுப்படுத்த அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்க 24ஆம் தேதி வரை மூட அரசு உத்தரவிட்டுள்ளது.





