நடுக்கடலில் பயணித்த சுற்றுலா பயணிகளை தாக்கிய மின்னல் ..!

மெரிக்காவில் 7 பேருடன் சென்ற படகை மின்னல் தாக்கிய காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன .அமெரிக்காவில் புளோரிடா கடல் பகுதியில் 7 பேருடன் படகு ஒன்று சென்று கொண்டிருந்தது. படகில் சென்று கொண்டிருந்த இருவர் போட்டோவுக்கு மகிழ்ச்சியுடன் போஸ் கொடுத்துள்ளனர்.

 

அப்போது திடீரென அவர்களுக்கு பின்னால் இருந்து மின்னல் தாக்கி தீப்பொறிகள் கிளம்பியதால் படகில் இருந்தவர்கள் பயத்தில் அலறியபடி நிலைதடுமாறி தாறுமாறாக விழுந்துள்ளனர். இந்த நிலையில் இந்த சம்பவத்தை அருகில் மீன்பிடி போட்டியில் கலந்து கலந்து கொண்ட குழுவினர் கடலோர காவல் படைக்கு தகவல் கொடுத்ததின் பேரில் படகில் இருந்தவர்களை மீட்க அமெரிக்க கடலோரக் காவல் படையினர் ஹெலிகாப்டர் மூலம் விரைந்துள்ளனர்.

 

பின்னர் அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு விமான நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு அவர்களது குடும்பத்தினர் அவர்களை வரவேற்றுள்ளனர். இது குறித்து பேசிய அமெரிக்க கடலோரக் காவல் படை விமானங்கள் மின்னல் மற்றும் விபத்து அடிக்கடி ஏற்படுவதால் ஓட்டுநர்கள் நன்கு தயாராகிய இருந்ததாக குறிப்பிட்டுள்ளனர்.

 

அவரிடம் மிக அதிக அதிர்வெண் கொண்ட ரேடியோ உட்பட தேவையான அனைத்து பாதுகாப்பு உபகரணங்களும் உள்ளன.