நேரலையில் தோன்றுவதாக கூறும் நித்யானந்தா..!
நித்யானந்தா தான் சமாதி நிலையில் இருப்பதாக தொடர்ந்து கூறி வந்த நிலையில் குருபூர்ணிமா நாளன்று நேரலையில் தோன்றுவதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நித்யானந்தா கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக சமாதியில் இருப்பதாக இணையத்தில் பதிவிட்டு வருகிறார்.
அவர் உரையாற்றுவதாக கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில் வருகிற 15-ஆம் நாளன்று குரு பூர்ணிமாவை முன்னிட்டு மீண்டும் நேரில் தோன்றி தரிசனம் தர இருப்பதாக சமூகவலைதளங்களில் அவர்கள் வீடியோ வெளியிட்டு தகவல்களை பரப்பி வருகின்றனர்.
கே ஜி எஃப் படத்தின் மியூசிக் பின்னணியில் மீண்டும் வருகிறார் என்று பதிவிட்டுள்ள வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது. ஒரு மாதத்திற்கு முன்பு நித்தியானந்தா மரணமடைந்ததாக தவறான தகவல் பரவியதை தொடர்ந்து அவரது புகைப்படத்துடன் கூடிய ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். அதில் மெல்லிய தேகத்துடன் காட்சி அளிப்பதால் உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.






